திருமணம் பற்றி த்ரிஷா திடீர் அறிவிப்பு…

trisha 2805தனக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் இம்மாதம் 23ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக த்ரிஷா சற்று முன் அவரது டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே த்ரிஷாவிற்கு மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

அதை மேலும் மறுக்க முடியாமல், த்ரிஷா சற்று முன் அவரது திருமண நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“ரசிகர்களுக்கும் மீடியாவில் இருக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் ஒரு செய்தி, எனக்கும் வருணுக்கும் நிச்சயதார்த்தம், இம்மாதம் 23ம் தேதி இருவரது குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் மிகவும் தனிப்பட்ட நிகழ்ச்சியாக நடக்க உள்ளது.

எங்களது திருமணத் தேதி பற்றி யாரும் குழப்ப வேண்டாம், அது பற்றி நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அது எப்போது என்று முதலில் என்னிடமிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நடிப்பை விட்டு விலக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விரைவில் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கையெழுத்திட உள்ளேன், 2015ல் நான்கு திரைப்படங்களின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்,” என த்ரிஷா கூறியுள்ளார்.

பத்திரிகைகளில் வந்த காதல் செய்தியை தற்போது த்ரிஷா உண்மையாக்கியிருக்கிறார்.

Read Previous

இந்த பொங்கல்…விஜய் டிவி பொங்கல்…

Read Next

ஆனந்த விகடன் விருதுகள் 2014 – விவரம்…