தயாரிப்பாளர் சங்க ஆதரவுடன் வரும் ‘C2H’…

director cheran c2h press meetஇயக்குனர் சேரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சி2எச்’ நிறுவனத்தின் முதல் வெளியீடாக அவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் டிவிடி வடிவில் வீடுகளுக்கு வினியோகிக்க நாளை வெளியிடப்படுவதாக இருந்தது.

தற்போது அது 15 நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும், ‘சி2எச்’ நிறுவனத்தின் வினியோகஸ்தர்களும் கலந்து கொண்ட ஒரு சந்திப்புக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு ‘சி2எச்’ நிறுவனத்தின் நோக்கம், செயல்பாடு குறித்து வீடியோக்களுடன் விளக்கமளிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இயக்குனர் சேரன் தெரிவித்த அனைத்து விளக்கங்களையும் கேட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ‘சி2எச்’ நிறுவனத்திற்கு அவர்களுடைய மேலான ஆதரவுகளைத் தெரிவித்துள்ளனர்.

அதனால், தமிழ்த் திரையுலகினர் பலரும் கலந்து கொள்ளும் விதத்தில் விரைவில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான விழா ஒன்றை நடத்தி அதன் மூலம் ‘சி2எச்’ நிறுவனத்தின் முதல் வெளியீட்டை நடத்த இருக்கிறார்கள்.

இது குறித்து இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இயக்குனர் சேரன் விளக்கமளித்தார். தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவுடன் ‘சி2எச்’ நடக்கும் போது தொடர்ந்து  பல படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. அதனால் எங்களது நிறுவனத்தைச் சார்ந்த வினியோகஸ்தர்களுக்கும், முகவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விரைவில் விழா நடக்கும் தேதி பற்றிய அறிவிப்பு வர உள்ளது.

Read Previous

‘ஐ’ வசூல் – அறுபது கோடி…

Read Next

Rajitha Kalpradha – Title winner of Nalaya Iyakunar season 5