உதயநிதியைக் கவர்ந்த ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’…

te1s press meet newsவிஎல்எஸ் ராக் சினிமாஸ் சார்பில் வி.சந்திரன் தயாரிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் தமன் இசையைமப்பில் நகுல், தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’.

இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இந்தப் படத்தை வாங்கி வெளியிடுதற்கான காரணத்தை நேற்று நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,  ‘எல்லாருமா சேர்ந்து ஒரு வெயிட்டான படம் எடுத்திருக்காங்க. மொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்தப் படத்தோட பாடலைத்தான் நான் முதல்ல கேட்டேன். என்ன படம் இதுன்னு விசாரிக்கும் போது, யு டியூப்ல போயிட்டு டிரைலர் பார்த்தேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, வித்தியாசமா இருந்துச்சி.

தயாரிப்பாளர் என்னோட நம்பரை அழுத்தலை, நான்தான் அவருடைய நம்பரை அழுத்தி போன் பண்ணேன். உங்க டிரைலர் பார்த்தேன், நல்லா இருந்ததுன்னு சொன்னேன். படம் ரெடியா இருக்கு, பார்க்கறீங்களான்னு கேட்டாரு. அடுத்து மூணு, நாலு நாள்ல எனக்கு படம் காட்டினாரு.

படத்தைப் பார்த்ததும் உடனே ஓகே சொல்லிட்டேன், படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி. இந்தப் படம் ஒரு நார்மலான தமிழ் சினிமா கிடையாது, வித்தியாசமான ஒரு படம். இந்த ஸ்கிரிப்டுக்காக ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணியிருக்காங்க.

கமர்ஷியல் சினிமாவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இந்தப் படத்துல இருக்கு. இந்தப் படத்துல லவ் டிராக் ரொம்ப நல்லா இருக்கு. நகுல் நல்லா டான்ஸ் ஆடுவாரு, இந்தப் படத்துல பயங்கரமா நடிச்சிருக்காரு. இந்தப் படத்தோட இயக்குனர் ராம்பிரகாஷ் ரொம்ப நல்லா வருவாரு, அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

எங்க ரெட் ஜெயன்ட் மூவீஸ்ல நாங்க தயாரிச்சி படங்களே வேணா வெற்றி பெறாம இருந்திருக்கலாம். ஆனால், வாங்கி ரிலீஸ் பண்ண படங்களுக்கு 100 பர்சென்ட் சக்சஸ் கிடைச்சிருக்குன்னு நான் நினைக்கிறேன். இந்தப் படத்துக்கும் எல்லாரும் ஆதரவு தரணும்னு கேட்டுகிறேன்,” என உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை வாங்கியதற்கான காரணத்தைக் கூறினார்.

 

Read Previous

‘உள்ளாடை’ விளம்பரம்…சமந்தா மறுப்பு…

Read Next

‘உத்தம வில்லன், ரஜினி முருகன்’ படங்களை வெளியிடும் ஈராஸ்