படங்களின் பெயரை பாட்டில் நுழைத்த கபிலன் வைரமுத்து

aayirathil iruvar title song newsசரண் இயக்கத்தில் வினய் நாயகனாக நடிக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’. இந்தப் படத்திற்காக பரத்வாஜ் இசையமைப்பில் கபிலன் வைரமுத்து படத்திற்கான டைட்டில் பாடலை எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடலில் சரண் இயக்கிய படங்களின் பெயரையும் பாட்டிற்குள் நுழைத்திருக்கிறார். “காதல் மன்னன், அமர்க்களம், ஜேஜே, ஜெமினி, அட்டகாசம், அசல்,” ஆகிய படங்களின் பெயரையும் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பாடல் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையான உரையாடல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது…

பாடல் இதோ…

பல்லவி

ஆண்:
மாங்கா பீசுல இந்த மாங்கா பீசுல
மொளகா பொடி முத்தத்தால
கலகம் செஞ்சு புட்ட

பெண்:
சுட்ட நரம்புல என் எச்சி பட்டதுல
கெக்க பெக்க கொழந்த பயன்
ரெக்க மொளச்சிட்ட

ஆண்:
காதலிக்கும்போது எனக்கு படபடங்குது
நீ அழைக்கும் நேரம் இங்க தொட நடுங்குது
தட்ப வெப்பம் கடந்து வர என்ன செய்யணும்?
தானைத்தலைவி என் திரைவிலக்கணும்

பெண்:
அட தொண்டா
ஒரு வண்டா
நீ என்னோடு ஓடி வா

சரணம் 1

ஆண்:
காதல் மன்னனாக நான் நெருங்கிவரும் நொடியில்
பாதர பார்வை பட்டு பரிதவிப்பேனே

பெண்:
கண்கள் ரெண்ட மூடி ஒரு காம வேர்வை மூட்டி
அமர்க்களமாய் அணைத்துக்கொண்டால் அவிழ்ந்திடுவேனே

ஆண்:
தயக்கங்களாலே நெருக்கங்கள் ஜேஜே
தவறுகளாலே இரவுகள் ஜேஜே

பெண்:
டேய் மாப்பி நான் பீப்பி
ஜெமினி பொம்ம போல என்ன வாசி

சரணம் 2

ஆண்:
சேல கட்டி முடிப்ப அந்த இடைவெளிய கொடுப்ப
தள்ளி நின்னு பாத்து பாத்து ரசித்திடுவேனே

பெண்:
அட்டகாசமாக நீ சட்ட மாட்டி வருவ
பட்டனெல்லாம் கழட்டிவிட்டு கட்டிக்கொள்வேனே

ஆண்:
அடங்கும் என் நெஞ்சம் பொய் எனத் தோன்றும்
உருகும் என் நெஞ்சே அசல் எனத் தோன்றும்

பெண்:
ஒரு உடம்பில் இரு இதயம்
இந்த படத்தின் தலைப்பு உனக்கு பொருந்தும்

 

Read Previous

மிஷ்கின் வெளியிடும் ‘கள்ளப் படம்’…

Read Next

அனேகன் – விமர்சனம்