‘நான் கொஞ்சம் சென்சிட்டிவ்’ – யுவன் ஷங்கர் ராஜா

யுவன்ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ‘யு 1’ நெல்லையில் மே மாதம் நடைபெற உள்ளது. கிரீன் டிரீஸ் சொல்யூஷன்ஸ் அமைப்புடன், புதுயுகம் தொலைக்காட்சி ஆகியவை யுவனுடன் சேர்த்து சமூக நலனுக்காக இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள்.

அது சம்பந்தமாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த யுவன் ஷங்கர் ராஜா பேசியதாவது,

“ஒரே மாதிரியான சிச்சுவேஷன் சொல்லியே பலர் பாடல் கேட்கறாங்க, அதனால படங்களைக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டேன். சார், சூப்பர் ஹிட் பாட்டா இருக்கணும்னு சார்னு சொல்வாங்க, சரி சிச்சுவேஷன் சொல்லுங்கன்னு கேப்பேன், ஹீரோவுக்கு ஹீரோயினைப் பார்த்ததும் காதல் வருதுன்னுவாங்க. வேற ஒருத்தவர் இந்த வருஷத்தோட சூப்பர் ஹிட் பாட்டா இருக்கணும்னு சொல்வாரு, சரி சிச்சுவேஷன் சொல்லுங்கன்னு கேப்பேன், ஹீரோயினைப் பார்த்ததும் ஹீரோவுக்கு காதல் வருதுன்னு சொல்வாரு.

ஒரு சந்தர்ப்பத்துல இது அப்படியே நின்னுடும், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பத் பண்ணும் போது ஸ்டேல் ஆகிடும். அவங்களை தப்பு சொல்றதும் சரியில்லை. அதான் படங்களைக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டேன். ஒரு வருஷத்துல அதிக பட்சமா 14 படங்கள் கூட பண்ணியிருக்கேன்.

இப்படிப்பட்ட சிச்சுவேஷனுக்கு பாட்டு போட்டே அப்பா 1000 படங்களைத் தாண்டிட்டாரே எனக் கேட்டதற்கு ‘அது அப்பாங்க’ என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

டிவிட்டரை விட்டு விலகியதற்கும் யுவன் காரணம் சொன்னார்.

“நான் கொஞ்சம் சென்சிட்டிவ். அதுல ஏதாவது ஒரு விஷயம் படிச்சம்னா சில சமயம் நம்ம மனசும் ரொம்ப பாதிப்படைஞ்சிடுது. அப்புறம் டியூன் போட்டுட்டிருக்கும் போது அந்த விஷயம் அப்படியே ‘பிளாஷ்’ அடிச்சால் மாதிரி வந்து போகுது. அதான், டிவிட்டர்ல இருந்து விலகிட்டேன். இப்ப இன்ஸடாகிராம்ல மட்டும் இருக்கேன். அதை என்னுடைய ரசிகர்கள் எடுத்து டிவிட்டர்ல போட்டுக்கிட்டு இருக்காங்க,” என டிவிட்டரிலிருந்து விலகியதற்கான காரணத்தையும் சொன்னார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் விரைவில் ‘இடம் பொருள் ஏவல், வை ராஜா வை, மாஸ்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

Read Previous

‘எலி’யில் வடிவேலுவுடன் சதா…

Read Next

வாய்ப்பு கொடுத்தவரிடமே வம்பு….இது சரியா பாபி சிம்ஹா…?

Most Popular