கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ ஆரம்பம்

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘விருமன்’ படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.

இப்படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.

நேற்று நடைபெற்ற பூஜையில் நடிகர் சிவகுமார், லட்சுமி சிவகுமார், சூர்யா, கார்த்தி, புதுமுகம் அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர், ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, K.E.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் பாலா, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்குனர் சுதா கோங்கரா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குநர் முத்தையா, இயக்குனர் ஜெகன், இயக்குனர் த.செ.ஞானவேல், இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா,  இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமார், ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, போஸ்டர் நந்தகுமார், சக்தி பிலிம்ஸ் சக்திவேல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள்  அழுத்தமிக்க, வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அது போலவே ‘விருமன்’ பட கதாநாயகி கதாபாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. தனது முதல் படத்திலேயே அப்படி ஒரு கனமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர். முன்னணி இயக்குநரின் மகள் என்பதைத் தாண்டி இப்படத்திற்காக தன்னை முழு அளவில் தயார் செய்து கொண்டுள்ளாராம். நடிப்புக்காக சிறப்பு பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டுள்ளாராம். 

முத்தையா – கார்த்தி இணைந்த ‘கொம்பன்’ படம் போலவே இப்படமும் கிராமத்துப் பின்னணியில், உறவுகளின் கதையைச் சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். கலை – ஜாக்கி , எடிட்டிங் – வெங்கட்.

தேனியில் செப்டம்பர் 18 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Read Previous

‘டைம் லூப்’ படமாகத் தயாராகி வரும் ‘ஜாங்கோ’

Read Next

விஷால், ஆர்யா நடிக்கும் ‘எனிமி’, வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Most Popular