பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் மற்றும் ஜெயராம் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌசிக் நடிக்கும் படம் ‘டக்கர்’.
அபிமன்யு சிங், யோகிபாபு, முனீஷ்காந்த், RJ விக்னேஷ்காந்த் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவர் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை சுவாரசியமாகச் சொல்லும் கதைதான் ‘டக்கர்’.
இப்படத்தில் யோகிபாபு அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து வருகிறார். அவருடைய கதாபாத்திரங்களும், நகைச்சுவையும் காமெடி கலாட்டாவாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.