மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரன், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ள ‘தக் லைப்’ படம் இந்த வாரம் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
நேற்று இப்படத்தின் முன்பதிவு ஆரம்பமானது. ஆன்லைன் இணையதளங்களில் விறுவிறுப்பான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அவர்களோடு சிலம்பரசனும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தின் டிரைலருக்கு மிக அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு மாறுபட்ட படைப்பைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.