பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’

ஸ்டுடியோ க்ரீன் சார்பாக கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்க, பா ரஞ்சித் இயக்கத்தில்,  விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க, பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சுதந்திர கால கட்டத்திற்கு முந்தைய படமாக உருவாகும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு அறிமுக வீடியோ இன்று வெளியிடப்பட்டது.

மாறுபட்ட தோற்றங்களில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் வீடியோவில் இருக்க, கதைக்களமும், கதாபாத்திரங்களும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படம் என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்க

“தங்களது குருதிச்சேற்றில் மாபெரும் தங்க வயலை கட்டியெழுப்பி வரலாற்றில் உரமாகிப்போன மக்களின் இரத்த சரித்திரம்! மீண்டும், நண்பர் பா. இரஞ்சித்துடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதும் திரைப்படத்தின் அறிமுகக் காணொளியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்த்துங்கள்! உடனிருங்கள்,” என பா ரஞ்சித்துடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதும் தமிழ்ப்பிரபா இந்த ‘தங்கலான்’ அறிமுக வீடியோ பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎப் என்று அழைக்கப்படும் ‘கோலால் தங்க வயல்’ தான் இந்தப் படத்தின் கதைக்களம் எனத் தெரிகிறது. அந்தக் காலகட்டதில் அந்த தங்க வயலில் வேலை செய்வதற்காகக் சென்ற மக்களைப் பற்றிய படம் இது என்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

‘கேடி த டெவில்’ – தலைப்பு அறிமுக டீசர் வெளியீடு

Read Next

கலகத் தலைவன் – டீசர்

Most Popular