ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், ஜீவா நாயகனாக நடிக்கும் ‘தகப்பன்’ படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான பூஜை, படப்பிடிப்பு நேற்று மதுரையில் ஆரம்பமானது.

விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்தை இயக்குகிறார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா – மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகிறது. குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

K. குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஒளிப்பதிவை M. சுகுமார் கவனிக்கிறார். படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை K.B.நந்தபாலன், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் கவனிக்கின்றனர். ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்ள, புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Read Previous

மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்’

Read Next

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் ‘ஹாய்’