Vinnai Thandi Varuvaya, new serial in Vijay Tv

Vijay television is all set to launch a new serial Vinnai Thandi Varuvaya from October 3rd, every Monday to Saturday at 7.30 pm.

The recent telecast of the promo has piqued the curiosity among the audience with its breathtaking visuals and music.

The serial will be an amalgamation Love, Passion and Ego. Vinnai Thandi Varuvaya is a love saga between two aspiring singers Vikram and Abirami, from different family circumstances.

Despite both having a musical family background, politics and vengeance in the industry gives them a roller caster experience.

The story will revolve around the Hardships in the life of a girl who tries to up bring her family’s financial status with her musical talent. Whereas, the male protagonist has a strong musical and financial background.

But his life takes a turn after meeting the love of his life. Wholly the crux of the story is that, how their love for each other gets tossed during their musical journey.

The Ever-Gorgeous Television actress Madhumila, who was last seen in office and Atcham Thavir will be seen portraying the female protagonist Abirami.

The Suave and handsome Television actor Vikraman will be the male lead. He is currently hosting a crime based show Nadandhadhu Enna in Vijay television.

And, he also did a pivotal role in Vijay Chithiram’s movie- Mehar. Along with them, actresses like Uma bhathmanabhan and Uma Riyas will be seen doing pivotal roles.

Vinnai Thandi Varuvaaya is directed by popular Director Sundar. K. Vijayan. He has tried his hands in film direction.

Notably, He is the son of popular director K. Vijayan, who has done 68 films with versatile actors.

This next generation love story is produced by ace Actor turned politician R. Sharathkumar’s maiden production – I pictures.
Vinnai Thandi Varuvaya Serial Vijay Tv Still

விஜய் தொலைக்காட்சியில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்னும் புத்தம் புதிய தொடர்ஆரம்பமாக உள்ளது. அக்டோபர் 3 முதல், திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

சமீபத்தில் இத்தொடரின் ப்ரோமோ வெளியானது. இதன் இசையும், கண்ணைக் கவரும் காட்சிகளும் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ தொடரின் கதாபாத்திரங்கள் விக்ரம் மற்றும் அபிராமி, இருவருமே இசை குடும்பத்தைத் சார்ந்தவர்கள். ஆனால் வெவ்வேறு பொருளாதார சூழ்நிலை கொண்டவர்கள். பாடும் தன் திறமையைக் கொண்டு இசைத் துறையில் வெற்றி பெறப் போராடும் ஒரு பெண் சந்திக்கும் கஷ்டங்கள் என்ன என்பது இத் தொடரின் மையமாக உள்ளது. மேலும் பாடகர்களாக நினைக்கும் இவர்களுக்கிடையே ஏற்படும் காதல் அவர்களின் குடும்பத்தையும், கனவையும் பாதிக்கிறதா என்பதே இத் தொடரின் கதை.

இந்த கதையின் நாயகியாக சின்னத்திரையின் அழகான நடிகையும், ‘ஆஃபீஸ்’ சீரியல் புகழ் மதுமிளா நடிக்கிறார். இவர் சமீபத்தில் ‘அச்சம் தவிர்’ நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்க்குகளையும் சுலபமாகக் கையாண்டு பாராட்டுப் பெற்றவர்.

சமீபத்தில் ‘நடந்தது என்ன’ என்னும் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் இளம் தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகருமான விக்ரமன் இந்த கதையின் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் விஜய் சித்திரம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற ‘மெஹர்’ என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். நடிகைகள் உமா பத்மநாபன் மற்றும் உமா ரியாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட போராடும் அனைத்து இளைஞர்களும் இந்தக் கதையை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். இந்தத் தொடர் காதல், இசை, லட்சியம், அகங்காரம், குடும்பம் என அனைத்தும் கலந்த ஒரு உணர்வுபூர்வமான தொடராக அமைய உள்ளது. அதனால், இது அனைத்து வகை பார்வையாளர்களையும் கவரும்.

சின்னத் திரையில் பட தொடர்களை இயக்கியுள்ள சுந்தர் கே. விஜயன் இத் தொடரை இயக்குகிளார்.

நடிகர் சரத் குமார் அவருடைய ஐ பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இத் தொடரை தயாரிக்கிறார்.

Read Previous

Dhanush is a busy bee

Read Next

Ivan Yarendru Therikiratha Trailer

Most Popular