எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படம்

எஸ்.ஜே.சூர்யா நாயகனாக புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘ரெமோ’ மற்றும் ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். இதனை ராஜநாராயணன் தயாரிக்கவுள்ளார்.

முதலில் இந்தக் கதையில் சந்தானம் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அவர் விலகிவிடவே இப்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். இந்தக் கதையினை கேட்டுவிட்டு, உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Read Previous

புகைப்படங்கள் லீக்: ‘ராமாயணம்’ படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்

Read Next

ஹாலிவுட்டில் பணிகளைத் தொடங்கினார் சூர்யா