சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.
’அமரன்’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் ‘அமரன்’ படப்பிடிப்பு தாமத்தினால், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சிவகார்த்திகேயன் – சிபி படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் நாயகியாக நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் சம்மதம் தெரிவிக்கவே, படம் குறித்த அறிவிப்பின் போதே நாயகி அறிவிப்பும் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. தற்போது சிவகார்த்திகேயன் உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.