ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய படம் ‘சைரன்’.
“இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ” படங்களின் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது.
ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார்.
காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது..
தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.