உலகத் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருஙகாட்சியகத்தில் சிலை வைப்பவார்கள்.
அந்த விதத்தில் தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையை வைக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார்கள்.
இன்று அந்த சிலை காஜல் அகர்வாலே திறந்து வைத்தார். அப்படியே காஜலை அச்சு வார்த்தது போலஅந்த சிலை உள்ளது.
அது பற்றி காஜல் அகர்வால் கூறுகையில்,
“என்னை நானே ஒரு கலைஞரின் விழியில் பார்க்கிறேன். எனக்கும் சிலைக்குமான ஒப்பீடு அபாரமானதாக உள்ளது. ஒரு சிறு பிசிறில்லாமல் அத்தனை நுண் விவரங்களுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தருணம் என் வாழ்வின் இன்றியமையாத பொன்னான தருணம். உலகின் மிக மிக பிரபலமான நபர்களின் சிலைகளுடன் எனது சிலையும் இடம்பெற்றிருப்பதில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.