கவினைப் பாராட்டிய சிம்பு

‘ஸ்டார்’ ட்ரெய்லரை பார்த்துவிட்டு கவினைப் பாராட்டியுள்ளார் சிம்பு

எளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்டார்’. யுவன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ‘ஸ்டார்’ படத்திற்கு பெரிய வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ‘ஸ்டார்’ ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கவினை தொலைபேசி வாயிலாக பாராட்டியிருக்கிறார் சிம்பு. ’ஸ்டார்’ ட்ரெய்லரை வெளியீட்டுக்கு முன்பே சிம்புவிடம் காட்டியிருக்கிறார் இயக்குநர் எளன். உடனே கவினிடம் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார்.

”ரொம்ப நன்றாக இருக்கிறது, சரியான அளவில் நடித்துள்ளீர்கள், மக்களுக்கு நல்ல கனெக்ட் ஆகும்” என்று கவினிடம் தெரிவித்துள்ளார் சிம்பு. இந்தப் பாராட்டினால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவின். மே 10-ம் தேதி வெளியாகும் ‘ஸ்டார்’ படத்தினை சுமார் 8 கோடி ரூபாய் கொடுத்து தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறார் சுப்பையா.

தமிழகத்தில் உள்ள அனைத்து விநியோக ஏரியாவையும் தனித்தனியாக விற்று நல்ல லாபம் பார்த்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Read Previous

விரைவில் ‘சங்கமித்ரா’ தொடங்கப்படும்: சுந்தர்.சி தகவல்

Read Next

உருவாகிறது ரஜினி பயோபிக்?

Most Popular