உருவாகிறது ரஜினி பயோபிக்?

ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு இந்தி திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சஜித் நடியவாலா ரஜினியை சந்தித்துப் பேசினார். இவர்கள் இருவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதை வைத்து பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தவில்லை.

இதனிடையே, இந்தி சினிமா முன்னணி இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி இணையத்தில் பெரும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. என்னவென்றால், ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் சஜித் நடியவாலா.

இதன் முதற்கட்ட பணிகளுக்கு ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காகவே ரஜினி – சஜித் நடியவாலா சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான கதை, திரைக்கதை பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் அனைத்தையும் முடித்து ரஜினியை சந்தித்து இறுதிகட்ட ஒப்புதல் வாங்கவுள்ளார் சஜித் நடியவாலா.

இதில் ரஜினியாக யார் நடிக்கவுள்ளார், இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே கதை முடிவானவுடன் தான் தெரியவரும்.

Read Previous

கவினைப் பாராட்டிய சிம்பு

Read Next

பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை – ஜோதிகா

Most Popular