விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க்நாதன் நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சீமான்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘எல்.ஐ.சி’. லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராகவும், ரவி வர்மன் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக சீமான் நடிக்கவுள்ளார். இதற்காக விக்னேஷ் சிவன் – சீமான் சந்திப்பு நடந்துள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
அப்டேட் இல்லாத அப்பாவுக்கும், கரண்ட் ட்ரெண்டில் இருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தப் படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.நீண்ட வருடங்கள் கழித்து முழு நீள கதாபாத்திரத்தில் சீமான் நடிக்கும் படமாக இது இருக்கும்.
மேலும், இந்தப் படத்தின் தலைப்புக்கு அரசாங்க நிறுவனமான எல்.ஐ.சி நோட்டீஸ் அனுப்பியிருப்பது நினைவுக் கூரத்தக்கது. இதனால் இதன் தலைப்பு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.