சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தினை இயக்கவுள்ளார் ‘குட்நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.
மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் நைட்’. 2023-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ‘குட் நைட்’ பார்த்துவிட்டு நீண்ட நேரம் இயக்குநரிடம் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதன் தொடர்ச்சியாக விநாயக்கும் கதை ஒன்றைக் கூறவே, அது சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து படம் பண்ணுவது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
யார் தயாரிப்பாளர் என்பது இன்னும் முடிவாகவில்லை. சிவகார்த்திகேயன் ஒ.கே செய்த கதைக்கு, திரைக்கதை எழுதும் பணியில் மும்முரமாக இருக்கிறார் விநாயக் சந்திரசேகரன்.