ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில், தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நஸ்ரியா நசிம், நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ‘சீன்’ திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனை முன்னிட்டு ‘145+ கோடி வசூல் – மெகா பிளாக்பஸ்டர்’ என்ற வாசகத்துடன் புதிய போஸ்டரையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வசூல் சாதனையின் மூலம் தீபாவளி வெளியீட்டுப் படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ‘சீன்’, தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.