தங்கைக்கு பிரம்மாண்ட பரிசு அளித்துள்ள சாய் பல்லவி

சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை தங்கைக்கு பரிசாக அளித்துள்ளார் சாய் பல்லவி.

’பிரேமம்’ படத்துக்குப் பிறகு தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம், ‘தாண்டீல்’ மற்றும் ‘ராமாயணம்’ என பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு சாய்பல்லவியின் தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பூஜா கண்ணனும் ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்குப் பிறகு திரையுலகில் கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில், தனது தங்கையின் திருமணத்துக்குப் பரிசாக சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார் சாய் பல்லவி. விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

முடிவுக்கு வந்தது ‘ஈகிள்’ பிரச்சினை

Read Next

’புஷ்பா 2’ வெளியீட்டில் மாற்றமா? – படக்குழுவினர் மறுப்பு