பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மாரி 2’.
இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ என்ற பாடல் வெளியான உடனே சூப்பர் ஹிட்டானது. யு டியூபில் இப்பாடலை 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி வெளியிட்டனர்.
தொடர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்து வந்தது இந்தப் பாடல். 800 மில்லியன் பார்வைகளை 442 நாட்களில் பெற்றிருக்கிறது.
100 மில்லியன் – 18 நாட்கள்
200 மில்லியன் – 42
300 மில்லியன் – 70
400 மில்லியன் – 106
500 மில்லியன் – 152
600 மில்லியன் – 224
700 மில்லியன் – 318
800 மில்லியன் – 442 நாட்கள்
தமிழ் சினிமா பாடல் ஒன்று 1 பில்லியன் அதாவது 100 மில்லியன் சாதனையைத் தொட்டால், அது ‘ரௌடி பேபி’ பாடலாக மட்டுமே இருக்கும்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்பாடலின் பார்வை 20 லட்சத்திற்கும் அதிகமாகி உள்ளது. அதோடு பாடலை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனைத் தொட்டுள்ளது.
இந்தப் பாடலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ‘3’ படத்தில் அனிருத் இசையில் தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ மேக்கிங் வீடியோ உள்ளது. இப்பாடல் 217 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
‘ரௌடி பேபி’ பாடலின் சாதனையை வேறு ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் முறியடிக்க இன்னும் சில வருடங்களாகலாம்.