காதலரை மணந்தார் பிரியா பவானி சங்கர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர், அவரது நீண்ட நாள் காதலர் ராஜவேலு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். நவம்பர் 11ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

தனது திருமணம் குறித்த மகிழ்ச்சியான செய்தியை பிரியா பவானி சங்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

“அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.

இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம்.

உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா பவானி சங்கரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திரையுலகினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

பேமிலி பாய் – முதல் சிங்கிள் வெளியீடு

Read Next

மக்கள் காவலன் – முதல் பாடல் வெளியீடு