கொரானோவிலிருந்து குணமடைந்த விஜய் பட கதாநாயகி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவருடைய 65வது படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரானோ தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

தற்போது கொரானோ பரிசோதனை மேற்கொண்டதில் தனக்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி, நான் நன்றாக குணமடைந்துவிட்டேன். முட்டாள் கொரானோவை அதன் பின் பக்கத்தில் நன்றிக உதைத்துவிட்டேன், கடைசியாக நெட்டிவ் என பரிசோதனையில் வந்துவிட்டது. ஹே…., உங்கள் அனைவரது விருப்பமும் குணப்படுத்தும் ஆற்றலும் அதன் மேஜிக்கை நிகழ்த்திவிட்டது என நினைக்கிறேன். என்றென்றும் நன்றி, பாதுகாப்பாக இருங்கள்,” என இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‘ராதே ஷ்யாம்’ படத்திலும், ராம்சரணுடன் ‘ஆச்சார்யா’ படத்திலும், ஹிந்தியில் ரன்வீர் சிங் ஜோடியாக ‘சர்க்கஸ்’ படத்திலும் நடித்து வருகிறார் பூஜா.

Read Previous

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘MMOF’

Read Next

மே 6ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular