ஓடிடி தளத்தில் வெளியாகும் 7வது படம் ‘பொன்மகள் வந்தாள்’ ?

நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ 5 ஆகிய ஓடிடி தளங்களில் தமிழ்த் திரைப்படங்களின் உரிமை நல்ல விலைக்கு வாங்கப்பட்டு வருகின்றன.

சாட்டிலைட் உரிமை அளவிற்கு சில படங்களின் ஓடிடி உரிமை வாங்கப்படுகிறது.

இருந்தாலும் கடந்த வருடம் “சிகை, களவு, இக்லூ” மூன்று படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. 2018ம் ஆண்டில் ‘ஆர்கே நகர்’ வெளிநாடுகளில் பார்க்கும்படி மட்டும் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு ‘கர்மா’ என்ற படம் யு டியுபில் வெளியாகி உள்ளது. 

இப்போது திரைக்கு வராத ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை ஓடிடி தளமான அமேசான் பிரைம்-ல் வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. மே முதல் வாரத்தில் வெளியாகலாம் என்கிறார்கள்.

கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியில்லாத சூழ்நிலையில் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள படம், ஜோதிகா நடித்துள்ள படம் என்பதால் தியேட்டர்காரர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை இது குறித்த சர்ச்சை நீடிக்கும்.

Read Previous

டிவி ஒளிபரப்பில் சாதிக்காத ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’

Read Next

பொன்மகள் வந்தாள் – 30 தயாரிப்பாளர்கள் ஆதரவு அறிக்கை