டிவி ஒளிபரப்பில் சாதிக்காத ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் ‘தர்பார்’.

இப்படம் கடந்த வாரம் ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டன்று சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பானது.

கொரானோ ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சமயத்தில் இப்படம் ஒளிபரப்பானதால் ரேட்டிங்கில் பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஸ்வாசம் (1,81,43,000), பிச்சைக்காரன் (1,76,96,000), சர்க்கார் (1,69,06,000), சீமராஜா (1,67,66,000), பிகில் (1,64,73,000), நம்ம வீட்டுப் பிள்ளை (1,47,74,000) ஆகிய படங்கள் முதல் முறை ஒளிபரப்பான போது புரிந்த சாதனையை விட ‘தர்பார்’ பின் தங்கியே அமைந்துள்ளது.

‘தர்பார்’ படத்திற்கு 1,45,93,000 தடப் பதிவுகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதே சமயம், கடந்த வாரம்  மீண்டும் ஒளிபரப்பான ‘காஞ்சனா 3’ படம் 1,51,84,000 தடப் பதிவுகளைப் பெற்று ‘தர்பார்’ படத்தை கடந்த வார ரேட்டிங்கில் பின்னுக்குத் தள்ளி உள்ளது.

மக்கள் வீட்டிலேயே இருந்தாலும் கூட ‘தர்பார்’ படத்தை அதிகம் பார்க்காமல் விட்டது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான ஒன்றுதான்.

அஜித், விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் புரியும் சாதனையைக் கூட ரஜினி படம் புரியவில்லை என்பது ஆச்சரியம்.

Read Previous

ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார் ? – இயக்குனர் இரா. சரவணன் விளக்கம்

Read Next

ஓடிடி தளத்தில் வெளியாகும் 7வது படம் ‘பொன்மகள் வந்தாள்’ ?

Most Popular