சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘பொன் மகள் வந்தாள்.
கடந்த வருடம் ஜுலை 15ம் தேதி இப்படத்தின் முதல் அறிவிப்பை வெளியிட்டார்கள்.
இப்படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இது ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டதோடு, படம் மார்ச் மாதம் 27ம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
Tags: jyotika pon magal vandhal