மிஷ்கின் இயக்கத்தில் ஆன்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு 2’

ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்  T.முருகானந்தம்  தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியானது.

‘சைக்கோ’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்க உள்ள இப்படத்தில் ஆன்ட்ரியா முதன்மைக் கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

நேற்று இப்பட வேலைகள் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்காக திண்டுக்கல்லில் பிரம்மாண்டமான செட் போடும் வேலைகள் ஆரம்பமாகி உள்ளது.

படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைக்க வந்துள்ள இப்படத்திற்கு, லண்டனைச் சேர்ந்த சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கின்றார். 

தயாரிப்பு – T.முருகானந்தம் (ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்)
எழுத்து, இயக்கம் – மிஷ்கின்
இசை – கார்த்திக் ராஜா
க்ரியேடிவ் தயாரிப்பாளர் – K.B.ஸ்ரீராம்
தயாரிப்பு மேற்பார்வை – L.B. ஸ்ரீகாந்த் லக்‌ஷ்மணன்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கண்ணதாசன்
மக்கள் தொடர்பு – சதிஷ், பிரியா

Read Previous

டிசம்பர் 15ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய் அறிமுகமாகும் படம்

Most Popular