சசிகுமார் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’

யோகி பாபு கதாநாயகனாக நடித்த ‘கூர்க்கா’ படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ நிறுவனம் அடுத்து சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.
 
‘பகைவனுக்கு அருள்வாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.

கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று ஆரம்பமானது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம்:

இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – கார்த்திக் கே தில்லை
படத்தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன்
கலை – விஜய் தென்னரசு
நடனம் – தீனா
சண்டைப்பயற்சி – ஆக்‌ஷன் நூர்
மக்கள் தொடர்பு – சதிஷ் 

Read Previous

அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய் அறிமுகமாகும் படம்

Read Next

அசோக் செல்வன், பிரியா பவானிசங்கர் நடிக்கும் புதிய படம்

Most Popular