‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி

ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’.

இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அது பற்றி படத்தின் இயக்குனர் அஷ்வத் கூறுகையில்,

“சிறப்புத் தோற்றம் என்பதை விட என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாபாத்திரம் என்பேன். அவர் படத்தில் வரும் நேரம் படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக இருக்கும்.

திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிகர்களின் தேர்வுகள் முடிந்த பிறகு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதுக்கு ஏற்ற ஒருவரைத்தே தேடினோம். மிகப் பிரபலமாக இருக்க வேண்டும் அதே நேரம், கேரக்டரில் எளிமையை நிஜத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.

கடைசியில் அசோக் செல்வன் மூலம் விஜய் சேதுபதியிடம் கதையை, கேரக்டரைப் பற்றி விவரித்தேன். உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டு வாழ்த்தினார்.

இந்த கதாபாத்திரம் படத்தில் வருவது சிறிது நேரமாக இருக்கலாம் ஆனால் ரசிகர்கள் மனதில் மிக நெருக்கமாக உணரக்கூடியதாக இருக்கும்.

சினிமாவில் பெரு வெற்றிகள் மூலம் தமிழக மக்களின் அன்பை அள்ளியிருக்கும் விஜய் சேதுபதி எங்கள் படத்தில் இணைந்ததில் மொத்த படக்குழுவுக்கும் மகிழச்சி. அவருக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.

Read Previous

தமிழ் சினிமா – அக்டோபர் 18, 2019 வெளியாகும் படங்கள்

Read Next

ஓ மை கடவுளே – டீசர்