‘விஸ்வாசம்’ – அஜித் ஜோடியாக நயன்தாரா

‘விவேகம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க,  சிவா இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதமே வெளியானது.

படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படாமலே இருந்தது.

இன்று படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ‘பில்லா, ஏகன், ஆரம்பம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நயன்தாரா மீண்டும் அஜித் ஜோடியாக நடிக்கப் போகிறார்.

படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி கடைசி வாரத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது.

Read Previous

சவரக்கத்தி, தனி அடையாளத்துடன் இயக்குனராக அறிமுகமாகும் ஆதித்யா

Read Next

‘சவரக்கத்தி’-யின் சவால் – இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா

Most Popular