தமிழுக்கு வரும் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன்

தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்து வசூல் சாதனை புரிந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’.

அப்படத்தில் நாயகனாக நடித்த விஜய் தேவரகொன்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து – வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் – கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் – எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ், ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி, சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

விஜய் தேவரகொன்டா நாயகனாகவும், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்ஸாதா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும், நாசர், சத்யராஜ், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

விக்ரம் பிரபு நடித்த ‘அரிமா நம்பி’, விக்ரம் நடித்த ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு சாந்தா ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன். தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இது.

சாம் சி.எஸ் இசையமைக்க, கலை இயக்கத்தை கிரண் மேற் கொள்கிறார்.

படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

அபி சரவணன் நடிக்கும் ‘வெற்றிமாறன்’

Read Next

எழுவாய் தமிழா, இசை வெளியீட்டு விழா