விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள், அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன் ஆகியோர் உள்ளனர்.
போட்டியாளர்கள் இரு அணிகளாக போட்டியிட்டு வருகின்றனர். இரு அணியினருக்கு இடையே இசைப் போர் நடந்து வருகிறது.
உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா ஒரு அணியினரையும், பென்னி அனுராதா மற்றொரு அணியினரையும் வழிவகுக்கின்றனர்.
சமீபத்தில் போட்டியாளர் ராஜலக்ஷ்மி நெசவு தொழில் பற்றி பாடிய நாட்டுப்புற பாடல் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் மாதவன் அது பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மேலும் பேஸ் புக்கில் அந்த வீடியோவை 16 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இந்த வார நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்க சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு இன்ப அதிர்ச்சியாக மனம் கவரும் இசை விருந்தையும் அளித்துள்ளார். போட்டியாளர்களின் திறமைகளை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கண்டுகளித்தார்.
மேலும் பல உணர்ச்சிமிகு தருணங்களுடன் மகிழ்ச்சியும் கலந்து இசை விருந்தாக இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
சிம்பு கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியை வரும் 10ம் தேதி சனி, 11ம் தேதி ஞாயிறு இரவு 7 மணிக்கு காணலாம்.