‘சூப்பர் ஸ்டார்’-ஐ நீக்கிய ரஜினிகாந்த்

தமிழ்த் திரையுலகத்தில் நீண்ட காலமாகவே ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்.

அவருடைய அந்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு விஜய், அஜித் ஆகியோர் ஆசைப்பட்ட காலங்களும் உண்டு. அடுத்த சூப்பர் ஸ்டார் தாங்கள்தான் என்ற ரீதியில் சில காலம் அவர்கள் செயல்பட்டார்கள். அதன்பின் அவர்களே அந்த ஆசையைத் துறந்துவிட்டார்கள்.

தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ரஜினிகாந்தும் அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் துறந்துவிட்டார்.

அவருடைய டிவிட்டர் தளத்தில் இன்று திடீரென சூப்பர் ஸ்டார் என்பதை நீக்கிவிட்டு ரஜினிகாந்த் என்று மட்டும் இருக்கும்படி மாற்றியிருக்கிறார்.

நேற்று ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் ‘ரஜினிகாந்த்’ என்ற பெயரில் மட்டுமே அவர் புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளார்.

அரசியலில் வேறு பட்டத்திற்கு ஆசைப்பட்டு இந்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைத் துறந்திருப்பாரோ….?.

Read Previous

மீண்டும் திரைக்கு வந்த ‘யாழ்’

Read Next

‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் சிம்பு