திரையுலகத்தில் நீண்ட நெடுநாளைய நண்பர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் அடுத்தடுத்து அரசியலில் இறங்கினர். எதிர்காலத்தில் அவர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.
ரஜினிகாந்த் எப்படி இருக்கிறாரோ தெரியவில்லை, ஆனால், கமல்ஹாசன் தமிழர்களின் பிரச்சினை, தமிழ்நாட்டின் பிரச்சினை என ஒவ்வொன்றுக்கும் குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் காவிரி பிரச்சினை, இரண்டு பெண்கள் மரணமடைந்த பிரச்சினை ஆகியவற்றிற்கு எந்த பதிலும் சொல்லாமல் திரும்பிக் கொண்டு சென்றுவிட்டார்.
அது பற்றி, இன்று கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “காவிரி விஷயத்தில் மட்டுமல்ல, பல்வேறு விஷயங்களில் அவர் அப்படித்தான் இருக்கிறார்,” என்று விமர்சனம் செய்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கப் போகிறார்கள் என்பதற்கு இந்த விமர்சனம் ஒரு சாட்சி.