மீண்டும் வெளியாகும் ‘கத்துக்குட்டி’

நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார்.

நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞானவேல், காதல் சந்தியா, காதல் சரவணன், ராஜா, சித்தன் மோகன், துளசி, மாறன், தேவிப்பிரியா, அற்புதன் விஜய், கசாலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படம் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்ற ‘கத்துக்குட்டி’ திரைப்படம் மார்ச் 23-ம் தேதி மீண்டும் வெளியாக உள்ளது.

படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.

‘கத்துக்குட்டி’ படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனமுவந்து பாராட்டியுள்ளனர்.

‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி’ என வைகோ, பாரதிராஜா கூறியுள்ளனர். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் ‘கத்துக்குட்டி’ என சீமான் மனம் திறந்து பாராட்டியுள்ளார். எண்ணற்ற பரிசுகளும் மரியாதைகளும் கத்துக்குட்டி படத்திற்கும் படத்தின் குழுவினருக்கும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் நாயகன் நரேன், முதன் முறையாக வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் சூரி, ‘ஜிஞ்சர்’ என்கிற பாத்திரத்தில், படம் முழுக்க காமெடியில் அசத்தியிருக்கிறார்.

Read Previous

இயக்குனருக்கு கார் பரிசளித்த சூர்யா, வினியோகஸ்தர்கள் கொதிப்பு

Read Next

28 பைரசி இணையதளங்கள் முடக்கம்