இயக்குனருக்கு கார் பரிசளித்த சூர்யா, வினியோகஸ்தர்கள் கொதிப்பு

சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் கடந்த பொங்கலன்று வெளிவந்தது.

படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், படத்தின் வசூல் பற்றி டிவிட்டரில் வெளிவந்த கருத்துக்களை படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடுமையாக எதிர்த்தார்.

வசூல் பற்றி டிவிட்டரில் எழுதுபவர்களையும் அவர் கடுமையாகச் சாடினார். உண்மையில் படத்தின் தோல்வியை மறைப்பதற்காகவே அவர் அப்படி செய்தார் என திரையுலகத்திலேயே பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

இதனிடையே, படம் நஷ்டத்தைத்தான் கொடுத்துள்ளது என படத்தின் சேலம் வினியோகஸ்தர் சொன்ன கருத்துகள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் இடம் பெற்றுள்ள வாட்ஸ்-அப்பில் குரூப்பில் சுற்றி வருகிறது.

சேலம் ஏரியாவில் மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டும் படத்தை வாங்கிய அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் சுமார் 15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அவர்கள் அனைவரும் சூர்யாவை சந்தித்து நஷ்ட ஈடு கேட்க முடிவு செய்துள்ளார்களாம். அது பற்றி அனைத்தும் தெரிந்திருந்தும் சூர்யா அதை மறைக்க இயக்குனருக்கு கார் பரிசளித்துள்ளார். படம் வெளியாகி இத்தனை நாள் கழித்து எதற்கு இப்படி ஒரு பரிசு என வினியோகஸ்தர்கள் கொதிப்படைந்துள்ளார்கள்.

2018ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் எந்த ஒரு படமும் லாபம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

Kaali – Official Trailer

Read Next

மீண்டும் வெளியாகும் ‘கத்துக்குட்டி’