28 பைரசி இணையதளங்கள் முடக்கம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் தமிழகக் காவல் துறை 28 பைரசி இணையதளங்களை முடக்கியுள்ளது.

அவற்றில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் பல்வேறு முகவரிகள் அடங்கியுள்ளது. அவை தவிர மேலும் சில இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு இந்த பைரசி இணையதளங்கள் பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு முன்னும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சில இணையதளங்கள் முடக்கப்பட்டன.

தமிழ்த் திரையுலகின் முதலீட்டை இப்படி மொத்தமாகத் திருடும் பைரசி இணையதளங்களை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்பதுதான் பல தயாரிப்பாளர்களின் கோரிக்கை.

இணையதள சேவை நிறுவனங்கள் நினைத்தால் அந்த மொத்த இணையதளங்களையும் அவர்களாகவே முடக்கிவிடலாம்.

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை இதற்கு தக்க நடவடிக்கை எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பல கோடி ரூபாய் நஷ்டம் தவிர்க்கப்படும்.

Read Previous

மீண்டும் வெளியாகும் ‘கத்துக்குட்டி’

Read Next

கொன்கொனா சென் ஷர்மா-வுக்கு கொல்லப்புடி சீனிவாஸ் விருது

Most Popular