‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் அனைவரும் அறியப்பட்ட நடிகராக மாறியவர் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியம்.
‘ஆ’ மற்றும் ‘அம்புலி’ ஆகிய படங்களை இயக்கிய ஹரி மற்றும் ஹரீஷ் அடுத்து இயக்க உள்ள ‘சில்க்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
அது என்ன ‘சில்க்’ ?. ஆங்கிலத்தில் ‘சில்க்’ என்றால் தமிழில் ‘பட்டு’. படம் காஞ்சிபுரப் பின்னணியில் படமாக உள்ளதாம். அதனால்தான் ‘சில்க்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள்.
“படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை கொண்டது. இந்தக் கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்குதான் காத்திருந்தேன் என்றார். படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்,” என்கிறார்கள் இயக்குனர்கள்.