‘அலைபாயுதே 2’ ஹீரோயின், ஸ்வாதிஷ்டா-வின் பேராசை

‘சவரக் கத்தி’ படத்தில் நடித்தவர் ஸ்வாதிஷ்டா. அந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரத்தில் இப்படி ஒரு நடிகை நடித்திருக்கிறார் என்று மூளையைப் போட்டு கசக்கி யோசிப்பவர்களுக்கு, படத்தில் மாற்றுத் திறனாளியைக் காதலிப்பவராக நடித்திருப்பாரே அந்தப் பெண்தான் ஸ்வாதிஷ்டா.

‘சவரக்கத்தி’ படத்தில் மிஷ்கின், ராம் ஆகியோருடன் நடித்தது பெருமை என்று சொல்லும் ஸ்வாதிஷ்டா, அவர்கள் நடிக்கும் படங்களிலும் நடிக்க வேண்டும் என்கிறார்.

இதையெல்லாம் விட ஸ்வாதிஷ்டாவிற்கு மிகப் பெரும் ஆசை, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டுமாம். அதுவும் அவர் ‘அலைபாயுதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டுமாம். அதில் ஷாலினி நடித்தது போன்ற மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிறார்.

ஏனென்றால், ஷாலியின் பாதையில் இவரும் பயணிக்க விரும்புகிறாராம்.

“அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் அழகு, திறமை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் நான் வியந்து பார்க்கிறேன். நான் பிரமித்துப் பார்த்து , அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை ஷாலினி அஜித்குமார். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு ‘கிளாசிக்’. சிறிய வயதிலேயே சிவாஜி சார், ரஜினி சார் ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரம், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு.

திரைத்துறையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கி நடப்பது சவாலான விஷயம். நான் தேர்ந்தெடுத்த இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி. அடுத்து ஜீவா சாரின் ‘கீ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்,” என்றார் ஸ்வாதிஷ்டா.

Read Previous

‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கும் ‘சில்க்’

Read Next

யு டியூப் பாடல் வரிகள் வீடியோவில் ‘சொடக்கு’ நம்பர் 1