‘நான் ஈ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் அனைத்து ஹீரோக்களும் விரும்பும் ஒரு ஹீரோயினாக மாறி விட்டார் சமந்தா. இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள்.
சமந்தா, தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மட்டுமே நடித்து முடித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
நடுவில் உடல்நலப் பிரச்சனையால், மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்திலும், ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்திலும் நடிக்க முடியாமல் போனதாக ஒரு தகவல் பரவியது.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கப் படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். மேலும் பல புதிய படங்களில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறார்.
தமிழில், சூர்யாவை ஹீரோவாக வைத்து லிங்குசாமி இயக்கப் போகும் புதிய படத்தில் நடிப்பதற்கு தற்போது சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.