ஒரு ‘டப்பிங்’ குழப்பம்

     திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், நந்தினி இயக்கத்தில், ’டும் டும் பீ பீ’ என்ற திரைப்படம் தமிழில் தயாராகி வருகிறது.

இத்திரைப்படத்தை படத்தில் நடிக்கும் நாயகன் சித்தார்த்தே ‘இது ஒரு டப்பிங் படம்தான்’ என்று சொல்லி விட்டார்.

சித்தார்த், சமந்தா, நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் தெலுங்கில் ‘ஜபர்தஸ்த்’ என்ற பெரியல் எடுக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் தமிழில் இப்படத்தை தயாரிக்கும் திருப்பதி பிரதர்ஸ் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறதா என திரையுலகினரே ஆச்சரியப்பட்டார்கள்.

இந்நிலையில் படத்தின் நாயகன் சித்தார்த் வெளியிட்டுளள ட்விட்டர் செய்தியில், ‘என்னுடைய குரல் ஒரிஜனல் தெலுங்கு படத்திற்கு மட்டும்தான், இதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Read Previous

விஷால் நடிப்பில் ‘பட்டத்து யானை’

Read Next

‘வாள்’ வீசும் அனுஷ்கா