‘சேட்டை’ ஷுட்டிங் முடிந்தது…

settai_00012யு டிவி தயாரிப்பில் கண்ணன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் ‘சேட்டை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்தது.

ஆர்யா, ஹன்சிகா நடிக்க வேண்டிய, இன்னும் ஒரு சில இணைப்புக் காட்சிகள் (patch work) மட்டுமே படமாக்கப்பட வேண்டும்.

நேற்று இப்படத்தில் இடம் பெற இருக்கும் அறிமுகப் பாடல் காட்சியான ‘லைலா ஓ லைலா’ பாடல் படமாக்கப்பட்டது.  நீது சந்திரா சிறப்புத் தோற்றத்தில் இப் பாடலுக்கு நடனமாட கூடவே ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி ஆகியோரும்  நடனமாடினர்.

இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘டெல்லி பெல்லி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘சேட்டை’. சமீபத்தில்தான் இசை வெளியீடு நடைபெற்று நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில் ‘சேட்டை’ வெளியாக உள்ளது.

 

 

Read Previous

விஜய்யின் ‘ஜில்லா’, யார் கட்டப் போறாங்க ‘கல்லா’

Read Next

2 நாள் பயிற்சி பெறும் ஜெயம் ரவி

Most Popular