‘சுட்ட கதை’ ஒரு துப்பறியும் கதை…

sutta kathai_00009‘துப்பறியும்’கற வார்த்தைய இன்றைய தலைமுறைக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு தனியா துப்பறிஞ்சால்தான் முடியும்.

‘டிடெக்டிவ்’ கதைன்னு சொன்னா உடனே புரிஞ்சிக்குவாங்க. ‘துப்பறியும் நாவல்கள்’  ஒரு காலத்துல சக்கை போடு போட்டுக்கிட்டு இருந்த வரலாறுலாம் உண்டு.

இப்ப நிறைய ‘துப்பறியும்’  கதைகள் வர்ற வரிசையில அதை காமெடியா ஆரம்பிச்சி வைக்கிற படம்தான் இந்த ‘சுட்ட கதை’.

பாலாஜி, வெங்கி, லட்சுமி பிரியா, நாசர் , ஜெயபிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர், இப்படி வெரைட்டியான நட்சத்திரங்களோட இந்த கதைய படமா சுட்டுட்டு வர்றாரு சுபு.

“துப்பறியும் கதையா இருந்தாலும், படம் முழுக்க காமெடிதான். இந்தக் கதை நடக்கும் இடம், களம் எல்லாமே தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கும்”.

ஒரு கொலை, அந்த கொலை எப்படி நடந்தது, ஏன் நடந்ததுன்னு விசாரிக்கற பயங்கர காமெடியாவும், அதே சமயம் த்ரிலிங்காவும் சொல்லியிருக்கோம்.

கதை நடக்கிறது எல்லாமே இரவு நேரம், கொடைக்கானல்ல முழு படப்பிடிப்பையும் நடத்தினோம்.

யாருமே படப்பிடிப்பு நடத்தாத இடத்தில நடத்தினோம். அப்படித்தான் ஒரு நாள் நிறைய காட்டெருமைகள் கூட்டமா வந்ததைப் பார்த்து, பயந்து நாங்க புதர்கள்ல பதுங்கி, இரண்டு மணிநேரம் கழிச்சி படத்தை எடுத்தோம்,” என்றார் இயக்குனர்.

காட்டெருமைகளை பார்த்து நீங்க பயந்தது ஓகே, படத்தை பார்த்து எங்களுக்கு பயம் வருமா , இல்ல காமெடி வருமா…

Read Previous

நார்வே குறும்பட விழா – ‘இடுக்கண்’ சிறந்த படமாக தேர்வு

Read Next

‘பரதேசி’ டிரைலர் – ரியலிட்டி பாதிப்பு…