‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பவர்ஸ்டார் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினாலும் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளன.
இதில் புதிதாக ‘பட்டணத்தில் பூதம்’ படத்தின் ரீமேக்கில் பூதமாக நடிக்கும் கதாபாத்திரமும் ஒன்றாகும்.
பம்மல் கே. சம்பந்தம், பஞ்ச தந்திரம், கனா கண்டேன், ஆடு புலி போன்ற படங்களைத் தயாரித்த பி.எல். தேனப்பன் அடுத்து 1967ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘பட்டணத்தில் பூதம்’ படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்.
இந்த படத்தில் ‘பூதம்’ கதாபாத்திரத்தில்தான் பவர்ஸ்டாரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன. ஜெய்சங்கர், நாகேஷ் கதாபாத்திரங்களில் நடிக்கவும் நட்சத்திரத் தேர்வும் நடந்து வருகிறது.
இன்றைய காலகட்டத்திற்கேற்ப படம் இருக்கும் விதத்தில் தயாராகப் போகிறதாம்.