கேரள பெண்ணைத் தேடும் அப்பா , மகன்…

knp_00026செய்தியோட தலைப்பைப் பார்த்ததும் தப்பா நினைச்சிக்காதீங்க…

விரைவில் வரப் போற ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தோட கதைக்கான செய்தித் தலைப்புதான் இது.

நமக்குதான் ஆசைப்பட்ட மாதிரி பெண் கிடைக்கலை, மகனுக்காகவது அப்படிப்பட்ட பெண் கிடைக்கட்டுமேன்னு நினைக்கிற அப்பா – அப்பா மாதிரியே ஆசைப்படற மகன்   , இதுதான் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தோட கதை.

பூ, களவாணி படங்களின் இசையமைப்பாளரும் ‘தேனீர் விடுதி’ படத்தை இயக்கியவருமான எஸ்.எஸ். குமரன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம்தான் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’…

அபி, காயத்ரி, தீக்ஷிதா, அபிராமி, ஞான.சம்பந்தன், ரேணுகா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

படத்தைப் பற்றி எஸ்.எஸ். குமரன், “படத்துல ஹீரோவாட அப்பாவான ஞானசம்பந்தன் , இளம் வயசுல ஒரு மலையாளப் பெண்ணை காதலிச்சிருப்பாரு. ஆனால், அவருக்கு அந்த காதல் தோல்வில முடிஞ்சிடும்…

அதனால , அவரோட பையனுக்காவது ஒரு மலையாளப் பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுவாரு. அதுக்கு அவரோட மனைவியான ரேணுகா சம்மதிக்க மாட்டாங்க, தமிழ்ப் பெண்ணைதான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைப்பாங்க.

இந்த சூழ்நிலையில ஹீரோவான அபி வாழ்க்கையில மூணு மலையாளப் பெண்கள் வருவாங்க, அப்புறம் என்னங்கறதுதான் இந்த படத்தோட சுவாரசியமான கதை ,” என்றார்.

அடுத்த மாதம் படத்தின் இசையும், அதற்கடுத்த மாதம் படமும் வெளியாக உள்ளது.

ம்ம்ம்….இங்க அவனவனுக்கு ஒரு பெண்ணை காதலிக்கவே கஷ்டமா இருக்கு…உங்க கதையில மூணு பெண்களா….நீங்களாம் நல்லா வருவீங்க….பாஸு……

 

Read Previous

ஈழத் தமிழர் பிரச்சனை – தமிழ்த் திரையுலக உண்ணாவிரதம்

Read Next

‘பூதமாக’ பவர்ஸ்டார்…