சென்னையில் தென்னாப்பிரிக்க திரைப்பட விழா

31-millon-reasonsதென்னாப்பிரிக்காவின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சென்னையில் முதல் முறையாக 21 மார்ச் 2013 முதல் 23 மார்ச் 2013 வரை மூன்று நாட்களுக்கு ‘தென்னாப்பிரிக்க திரைப்பட விழா’ ஒன்றை நடத்துகிறது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள 4 பிரேம்ஸ் திரையரங்கில் தினமும் ஒரு படம் வீதம் மூன்று நாட்களுக்கு மூன்று படங்கள் திரையிடப்படுகின்றன.

‘ஸ்கீம், 31 மில்லியன் ரீசன்ஸ், ஜமா ஜமா’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. 31 மில்லியன் ரீசன்ஸ், ஜமா ஜமா ஆகிய படங்களின் திரையிடலின் முடிவில் அப்படங்களின் இயக்குனர்கள் நம்முடன் நேரடியாக உரையாடவும் இருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க திரைப்படங்களைக் கொண்டாடும் விதத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க கலை மற்றும் பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

Read Previous

‘பூதமாக’ பவர்ஸ்டார்…

Read Next

சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்