சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

film-institue-fastingஇலங்கை  தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வாழ்வுரிமையை  மீட்டு எடுக்க ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு எடுத்த  தீர்மானத்திற்கு ஆதரவாகவும், சென்னை, அடையாறு திரைப்பட கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

காலை 9 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் அரசு திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு பயின்ற முன்னாள், இந்நாள் மாணவர்கள்,  மாணவிகள் என 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

முன்னாள் மாணவர்கள் ஆபாவணன், ‘உளவுத்துறை’ ரமேஷ் செல்வன், சித்திரை செல்வன் ஆகியோர் முன்னின்று இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Read Previous

சென்னையில் தென்னாப்பிரிக்க திரைப்பட விழா

Read Next

ரெண்டாவது படத்தில் வெங்கட் பிரபு…