‘நீ வருவாய் என’ , ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘காதலுடன்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘திருமதி தமிழ்’.
தேவயானி, கீர்த்தி சாவ்லா, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
தொடர்ந்து பல வாரங்களாக இந்த படத்திற்கு பத்திரிகைகளில் ‘விரைவில்’ என்ற விளம்பரம் வந்து கொண்டேயிருக்கிறது. அவர்களும் சளைக்காமல் விதவிதமான ‘கேப்ஷனுடன்’ ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி வந்தார்கள்.
இன்று பட ரிலீஸ் தேதியுடன் விளம்பரம் கொடுத்து படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களின் பேராவலை பூர்த்தி செய்துள்ளார்கள்.
அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி படம் வெளியாகும் என்று இன்றைய நாளிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் கூட ஒரு ‘கேப்ஷன்’ இடம் பெற்றிருக்கிறது.
“ஆடி பூரத்தில்….நீ வருவாய் என
ஸ்ரீ ராமநவமியில் ….திருமதி தமிழ்”….