ஒரு வழியாக நானும் ‘சோலோ’ ஹீரோவாயிட்டேன்’ – இதை மிகவும் மகிழ்ச்சியாக சொன்னவர் பிரேம்ஜி அமரன்.
புதிய பட நிறுவனமான ட்ரீம் சோன் மூவீஸ் P.C.K. சக்திவேல் தயாரிப்பில் R.S. ராஜா இயக்கத்தில் தயாராகும் புதிய படம் ‘மாங்கா’.
இந்த படத்திற்கு இசையமைத்து ஹீரோவாக நடிக்கிறார் பிரேம்ஜி. பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஹர்ஷா ஹீரோயினாகவும், தம்பி ராமையா, மனோபாலா, டி.பி. கஜேந்திரன், உமா பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. படத்தின் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பிரேம்ஜி, “ஒரு வழியா நானும் ‘சோலோ’ ஹீரோவாகிட்டேன். அது மட்டுமில்ல இந்த படத்துக்கு மியூசிக்கும் பண்றன்.
எனக்கு இந்த படத்துல டபுள் கேரக்டர். இதுல ஒரு கேரக்டர் 1950ல வர்ற மாதிரி பாகவதர் ஹேர்ஸ்டைல்லாம் வச்சிக்கிட்டு ரொம்ப வித்தியாசமா இருக்கும், இப்பதான் கம்பேசிங் ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். பவர்ஸ்டார் ஒரு முக்கிய கேரக்டர்ல நடிக்கிறாரு, கண்டிப்பா படம் நல்லா வரும்,” என்றார்.
இயக்குனர் ராஜா பேசும் போது, “ வாழ்க்கையில மிகப் பெரிய விஞ்ஞானியா வரணும்னு ஆசைப்படற பிரேம்ஜி கண்டுபிடிக்கிற எல்லாமே முட்டாள்தனமாக அமைஞ்சிடுது.
அந்த சமயத்துல அவர் சந்திக்கிற அந்த காலத்து பாகவதர் டைப் இன்னொரு பிரேம்ஜியை சந்திக்கிறாரு. இவங்க இரண்டு பேருக்கும் நடக்கிற போட்டிதான் படத்தோட கதை, ” என்றார்.
‘மாங்கா’ன்னு பேரு வச்சாலும் ‘மாம்பழம்’ மாதிரி ருசிக்கிற படமா கொடுப்பாங்கன்னு ஸ்டில்சை பார்த்தாலே தெரியுது….